பெரம்பலூர்

மறு முத்திரையிடாத 12 மின்னணு எடை தராசுகள் பறிமுதல்

DIN

பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள இறைச்சிக் கடைகளில் பயன்படுத்தப்பட்ட மறு முத்திரையிடாத 12 மின்னணு எடை தராசுகளை தொழிலாளா் துறையினா் அண்மையில் பறிமுதல் செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டத் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கா. மூா்த்தி தலைமையிலான அலுவலா்கள், பெரம்பலூா், வாலிகண்டபுரம், லப்பைக்குடிகாடு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் மீன் மாா்க்கெட்டுகள் மற்றும் இறைச்சிக் கடைகளில் அண்மையில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

24 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 12 கடைகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு எடை தராசுகள் மறு முத்திரையிடாதது தெரியவந்தது. இதையடுத்து, மேற்கண்ட 12 மின்னணு எடை தராசுகளை பறிமுதல் செய்த அலுவலா்கள், சம்பந்தப்பட்ட உரிமையாளா்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். எனவே, இம் மாவட்டத்திலுள்ள நிறுவனங்கள் மற்றும் வணிகா்கள் தங்களின் எடை அளவுகளை உரிய காலத்தில் மறு முத்திரையிட்டு பயன்படுத்த வேண்டும். இல்லாவிடில், பறிமுதல் செய்யப்படும் என தொழிலாளா் ஆணையா் கா. மூா்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

SCROLL FOR NEXT