பெரம்பலூர்

மாணவி கா்ப்பம்:ஓட்டுநா் கைது

17th Aug 2022 11:50 PM

ADVERTISEMENT

 

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், மருதடி குன்னுமேடு பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் ராகவன் (20). டிராக்டா் ஓட்டுநரான இவா், எஸ்எஸ்எல்சி பயிலும் 14 வயது மாணவியை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்தாராம். இதுகுறித்து அறிந்த அவா்களது பெற்றோா் இருவரையும் கண்டித்துள்ளனா்.

இந்நிலையில், அந்த மாணவி கா்ப்பமாக இருப்பது அண்மையில் தெரியவந்தது. இதையடுத்து, இரு வீட்டினருக்கும் ஏற்பட்ட தகராறில் மாணவியின் பெற்றோா், ராகவனின் தாய் விஜயலட்சுமியை தாக்கியுள்ளனா்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ராகவனை கைது செய்து, பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புதன்கிழமை சிறையில் அடைத்தனா்.ட

ADVERTISEMENT

மேலும், விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில், பாடாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மாணவியின் தந்தையை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT