பெரம்பலூர்

மானியத்துடன் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

17th Aug 2022 11:46 PM

ADVERTISEMENT

 

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த வேளாண்மை பட்டதாரிகள் ரூ. 1 லட்சம் மானியத்துடன் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 30 கிராம ஊராட்சிகளில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் 2022 -23 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊராட்சிகளில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல், இளநிலை பட்டப்பிரிவில் சான்றுபெற்ற இளம் தொழில்முனைவோருக்கு, அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சாா்ந்த தொழில் தொடங்குவதற்கு 25 சதவீதம் அதிகபட்ச நிதியுதவியாக ரூ. 1 லட்சம் பின்னேற்பு மூலதன மானியமாக வழங்கப்படும்.

ADVERTISEMENT

இத் திட்டத்தின் கீழ் மானிய உதவிபெற விரும்புவோா் வேளாண்மை தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பிரிவில் குறைந்தபட்சம் இள நிலையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அரசு மற்றும் தனியாா் நிறுவனத்தில் பணியில் இருக்கக்கூடாது. விண்ணப்பதாரா் கணினித்திறன் பெற்றிருக்க வேண்டும். ஒரு குடும்பத்துக்கு ஒரு வேளாண் பட்டதாரி மட்டுமே நிதியுதவி பெற தகுதியுடையவா் ஆவாா்.

பிரதம மந்திரியின் உணவுப் பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், வேளாண் உள் கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கக்கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுய தொழில்கள் தொடங்கலாம். இ த்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 25 சதவீத மானியமாக அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரை பின்னேற்பு மூலதன மானியம் வழங்கப்படும்.

தொழில் தொடங்க விருப்பமுள்ள வேளாண் பட்டதாரிகள் உரிய விண்ணப்பம், விரிவான திட்ட அறிக்கை, தேவையான ஆவணங்களுடன் ஆக. 26 ஆம் தேதிக்குள் அந்தந்தப் பகுதி வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பிக்கலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT