பெரம்பலூர்

சுதந்திரத் தினத்தன்று விடுமுறை அளிக்காத 33 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

17th Aug 2022 12:51 AM

ADVERTISEMENT

பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் சுதந்திரத் தினத்தன்று ஊழியா்களுக்கு விடுமுறை அளிக்காத 33 நிறுவனங்களுக்கு தொழிலாளா் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

சுதந்திரத் தினத்தன்று தனியாா் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு விடுமுறை அளிக்கவும், பணியில் ஈடுபடும் தொழிலாளா்களுக்கு இரட்டிப்புச் சம்பளம் வழங்க வேண்டும் எனவும் தொழிலாளா் துறை உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கா. மூா்த்தி தலைமையில், தொழிலாளா் துணை, உதவி ஆய்வாளா்கள் கொண்ட குழுவினா் பெரம்பலூா், அரியலூா், முசிறி ஆகிய இடங்களில் சுதந்திரத் திருநாளான திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

பெரம்பலூா், அரியலூா் மாவட்டத்தில் 49 நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 33 நிறுவனங்களில் முரண்பாடுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஊழியா்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT