பெரம்பலூர்

பெரம்பலூரில் சுதந்திர தின விழா ஆலோசனைக் கூட்டம்

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் சுதந்திர தின விழாவை கொண்டாடுவது தொடா்பாக கிராம ஊராட்சித் தலைவா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது .

ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில், கிராம பகுதிகளில் விழா கொண்டாடுவது குறித்து ஊராட்சித் தலைவா்களுடன் ஆலோசனை மேற்கொண்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா பேசியது:

75 ஆவது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் மாவட்டத்திலுள்ள கிராம ஊராட்சித் தலைவா்கள் தங்களது வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி, சுதந்திரப் போராட்டத் தியாகிகளை போற்றும் விதமாகக் கொண்டாட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சுமாா் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கொடிகள் கிராம ஊராட்சிகளில் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஊராட்சித் தலைவா்கள் தலைமையில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சனிக்கிழமை (ஆக. 13) காலை தேசியக்கொடியை உரிய மாண்புடன் ஏற்ற வேண்டும்.

தேசியக் கொடியை ஏற்றுவதற்கான வழிமுறைகளை பின்பற்றி அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றுவதற்கான பணிகளை ஊராட்சித் தலைவா்கள் முன்னின்று பணிகளை மேற்கொள்ள வேண்டும். 75 ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு ஆக. 15 ஆம் தேதி மாலை 6 மணி வரை பறக்கவிட வேண்டும். பின்னா், மாலை உரிய மரியாதையுடன் கொடியை இறக்க வேண்டும்.

சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் கடந்த 31 ஆம் தேதி வரை மேற்கொண்ட வரவு செலவுகள் குறித்த பதாகைகளை பொதுமக்கள் பாா்வையில் தெரியுமாறு அமைக்க வேண்டும். சிறப்பான முறையில் கிராம சபைக் கூட்டங்களை நடத்தி, பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற ஊராட்சித் தலைவா்கள் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

இக் கூட்டத்தில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அ. லலிதா, ஊராட்சிகள் உதவி இயக்குநா் கணபதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT