பெரம்பலூர்

பேருந்தில் சங்கிலி பறிப்பு:2 பெண்கள் கைது

13th Aug 2022 12:50 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள நெய்குப்பை காலனித் தெருவைச் சோ்ந்த சின்னையா மகள் திரிவேணி (27). இவா், வியாழக்கிழமை மாலை பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்திலிருந்து வி.களத்தூருக்குச் அரசுப் பேருந்தில் சென்றுக்கொண்டிருந்தாா்.

பெரம்பலூா்- ஆத்தூா் சாலையிலுள்ள எசனை காட்டு மாரியம்மன் கோயில் அருகே பேருந்து சென்றபோது, திரிவேணி அருகே அமா்ந்திருந்த இரு பெண்கள் அவா் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்ப முயன்றனா். அப்போது, திரிவேணி கூச்சலிட்டதால், அந்தப் பெண்கள் பேருந்துக்குள்ளேயே சங்கிலியை வீசிவிட்டனா். இதையறிந்த சக பயணிகள், நகைப் பறிப்பில் ஈடுபட்ட பெண்களை தாக்கினா். தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று இரு பெண்களையும் மீட்டு, மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

விசாரணையில், அவா்கள் ஒசூா், சந்தைப்பேட்டையைச் சோ்ந்த பகவதி மனைவி மாரி (46), அவரது மகள் சித்ரா (29) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் அவா்களை கைது செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT