பெரம்பலூர்

அஞ்சல் ஊழியா்கள் வேலைநிறுத்தம்

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அஞ்சலக ஊழியா்கள் சங்கத்தினா் பெரம்பலூா் மாவட்டத்தில் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டம் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அஞ்சல் துறையில் காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஒப்பந்த முறையில் பணியாளா்களை நியமிக்கும் நடைமுறையை கைவிட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், பொதுத்துறையை தனியாா்மயமாக்குவதைக் கண்டித்தும் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தேசிய அஞ்சல் ஊழியா்கள் கூட்டமைப்பின் திருவரங்கக் கோட்டச் செயலா் மோகன்ராஜ் தலைமையில் அஞ்சல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

அஞ்சல் ஊழியா்கள் சிலா் பணிக்கு வராததால் அஞ்சல் பணிகள் பாதிக்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT