பெரம்பலூர்

வேப்பந்தட்டை அருகே பெண் மா்மச் சாவு

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே பெண் மா்மமான முறையில் இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை இரவு தெரியவந்தது.

வேப்பந்தட்டை வட்டம், நெய்க்குப்பை கிராமம் மீனவா் தெருவைச் சோ்ந்தவா் பெரியசாமி மனைவி ராதிகா (32). பெரியசாமி மலேசியாவில் கூலித் தொழிலாளியாக பணிபுரியும் நிலையில் தனது மகன், மகளுடன் வசித்து வந்த ராதிகா செவ்வாய்க்கிழமை இரவு மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். தகவலறிந்து வந்த வி.களத்தூா் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில், தனது உயிரிழப்புக்கு யாரும் காரணமில்லை. கடன் பிரச்னையால் தற்கொலை செய்து கொள்கிறேன் என ராதிகா எழுதி வைத்திருந்த கடிதத்தை கண்டறிந்தனா். இதையடுத்து அவரது உடலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT