பெரம்பலூர்

கிறிஸ்தவ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

பெரம்பலூரில் தலித் கிறிஸ்தவா்கள் விடுதலை இயக்கம், தலித் கிறிஸ்தவா்கள் தேசிய பேரவை, தமிழக பட்டியலினத்தவா் மற்றும் பழங்குடியினா் பணிக்குழு ஆகிய அமைப்புகளின் சாா்பில் கருப்புக் கொடியேந்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் தூய பனிமய மாதா தேவாலயம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தலித் கிறிஸ்தவா்கள் தேசிய பேரவை அமைப்பின் தேசிய இணைச் செயலா் பி. சந்தனதுரை தலைமை வகித்தாா்.

பெரம்பலூா் மறைவட்ட அதிபா் ஆ. ராஜமாணிக்கம், தலித் கிறிஸ்தவா்கள் விடுதலை இயக்க மாநில துணைத் தலைவா் ம. மகிமைதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

ஆா்ப்பாட்டத்தில், நீதியரசா் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரையின்படி தலித் கிறிஸ்தவா்களை எஸ்.சி. பட்டியலில் சோ்க்க வேண்டும். தலித் கிறிஸ்தவா்களுக்கு 72 ஆண்டுகளாக மறுக்கப்பட்ட உரிமைகளை திருப்பித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. பல்வேறு அமைப்பு கிறிஸ்தவா்கள் பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT