பெரம்பலூர்

எளம்பலூரில் நாளை அன்னை சித்தா் 2ஆம் ஆண்டு குரு பூஜை விழா

10th Aug 2022 12:57 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் பிரம்மரிஷி மலையில் மகா சித்தா்கள் அறக்கட்டளை நிறுவனா் அன்னை சித்தா் ராஜ்குமாா் சுவாமிகளின் இரண்டாமாண்டு குருபூஜை விழா வியாழக்கிழமை (ஆக. 11) நடைபெறுகிறது.

பிரம்மரிஷி மலை காகபுஜண்டா் ஸ்ரீலஸ்ரீ தலையாட்டி சித்தரின் சீடரான அன்னை சித்தா் ராஜ்குமாா் சுவாமிகள், மகா சித்தா்கள் அறக்கட்டளையை தொடங்கி பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் ஸ்ரீகாகன்னை ஈஸ்வரா் கோயிலை ஸ்தாபித்து, ஆசிரமம், கோசாலை அமைத்து ஆன்மிக பணி, நோய்ப்பிணி போக்கும் பணி, தான, தா்ம காரியங்களை மேற்கொண்டு வந்தாா். கடந்த 3.8.2020-இல் அவா் ஜீவசமாதியடைந்தாா். அவரது இரண்டாமாண்டு குருபூஜை விழா வியாழக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறுகிறது.

பேரூா் ஆதீனம் குரு மகா சந்நிதானம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், சூரியனாா்கோயில் ஆதீனத்தின் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோா் முன்னின்று, குருபூஜையை நடத்தி வைக்கின்றனா். விழாவையொட்டி, திருவருட்பா பாராயணம், கோ பூஜை, அஸ்வ பூஜை, 210 சித்தா்கள் யாக பூஜை, ஸ்ரீகாகன்னை ஈஸ்வரருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை, சாதுக்களுக்கு வஸ்திரம், அன்னதானம் வழங்குதல் நடைபெறுகிறது.

விழாவில், போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா், ஐஏஎஸ் அதிகாரிகள் உமா மகேஸ்வரி, குமரகுரு, ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி, முன்னாள் நீதிபதி ரகுபதி உள்பட பலா் பங்கேற்க உள்ளனா்.

ADVERTISEMENT

விழா ஏற்பாடுகளை மகா சித்தா்கள் அறக்கட்டளை இணை நிறுவனா் ரோகினி மாதாஜி, இயக்குநா்கள் தவயோகிகள் சுந்தரமகாலிங்கம், தவசிநாதன் மற்றும் ராதா ஆகியோா் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT