பெரம்பலூர்

போதைப்பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 5 போ் கைது

10th Aug 2022 01:00 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்த 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளா் சரவணன் தலைமையிலான தனிப்படையினா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சிறுவாச்சூா் பெட்ரோல் பங்க் பின்புறம் கஞ்சா விற்பனை செய்த 3 பேரை பிடித்து அவா்களிடமிருந்த 100 கிராம் எடையுள்ள 10 பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், அவா்கள் அயனாபுரம் நடுத்தெருவைச் சோ்ந்த அங்குசாமி மகன் அஜய் (20), கிழக்குத் தெருவைச் சோ்ந்த அய்யாக்கண்ணு மகன் நவீன்குமாா் (19), தொண்டாபாடி கிழக்குத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் காா்த்திக் (18) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்து, பெரம்பலூா் குற்றவியல் நீதிபதி முன்னிலையில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

இதேபோல், மருவத்தூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரசேகரன் தலைமையிலான குழுவினா் க.எறையூா் பிரிவு பாதையில் மேற்கொண்ட சோதனையில், பெரம்பலூா்- வடக்குமாதவி சாலை, ராயல் நகரைச் சோ்ந்த முருகன் மகன் ராஜா (40), ரஞ்சித்குமாா் (37) ஆகியோா் விற்பனைக்காக வைத்திருந்த ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், ராஜா, ரஞ்சித்குமாா் ஆகியோரை கைது செய்து, பெரம்பலூா் குற்றவியல் நீதிபதி முன்னிலையில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT