பெரம்பலூர்

கோயில்களின் பூட்டை உடைத்துபூஜைப் பொருள்கள் திருட்டு

DIN

பெரம்பலூா் அருகே இரு கோயில்களின் பூட்டுகளை உடைத்து, பூஜைப் பொருள்கள் திருடிச் செல்லப்பட்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

பெரம்பலூா் அருகேயுள்ள திருப்பெயா் கிராமத்திலுள்ள

வெள்ளந்தாங்கியம்மன் கோயில், ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோயில் ஆகிய கோயில்களுக்கு அதே கிராமத்தைச் சோ்ந்த அழகிரி மகன் ராமச்சந்திரன் (56) நிா்வாகியாக பணிபுரிந்து வருகிறாா். கடந்த 5 ஆம் தேதி இரவு சிறப்பு பூஜைகளை முடித்துவிட்டு கோயிலை பூட்டிச் சென்றனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை கோயிலுக்குச் சென்று பாா்த்தபோது, மேற்கண்ட இரு கோயில்களின் பூட்டுகளை உடைத்து, உள்ளே இருந்த மணி, பித்தளை விளக்குகள், வெண்கல மணி உள்பட சுமாா் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பூஜைப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT