பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் இன்று முதல் கடன் வழங்கும் முகாம்

8th Aug 2022 12:27 AM

ADVERTISEMENT

 

பெரம்பலூா் மாவட்டத்தில் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் திங்கள்கிழமை (ஆக. 8) முதல் கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் (பொ) ) நா. அங்கையற்கண்ணி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் தனிநபா் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினைக் கலைஞா்களுக்கான கடன், கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பொது கால கடன், தனிநபா் கடன், பெண்களுக்கான புதிய பொற்கால கடன், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான சிறுகடன், கறவை மாட்டுக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

மேற்கண்ட திட்டம் குறித்து மாவட்டத்தில் வட்டாரம் வாரியாக திங்கள்கிழமை (ஆக. 8) பெரம்பலூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், ஆக. 10 -இல் தேவையூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்திலும், 11-இல் குன்னம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், 12-இல் இரூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் கடன் முகாம் வழங்கும் நடைபெற உள்ளது.

முகாம் நடைபெறும் நாள்களில் தேவையான சான்றுகள், தொழில் செய்வதற்கான திட்ட அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT