பெரம்பலூர்

‘வேப்பந்தட்டையில் வேளாண் கல்லூரி தேவை’

DIN

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற மாநாட்டுக்கு, சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் சி. கோவிந்தன் தலைமை வகித்தாா். வட்டத் தலைவா் ஆா். சாமிதுரை, செயலா் பி. ராமச்சந்திரன், துணைத் தலைவா் எ. செங்கமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என். செல்லதுரை கோரிக்கைகளை விளக்கினாா்.

கூட்டத்தில் பெரம்பலூா் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சின்னமுட்லு நீா்த்தேக்கத் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும். வேப்பந்தட்டை பகுதியில் அரசு வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும். கால்நடைப் பராமரிப்புக்கு மானிய விலையில் தீவனம் வழங்கி, பால் உற்பத்தியாளா்களுக்கு கறவை மாடு கடன் வழங்க வேண்டும்.

வேப்பந்தட்டை வட்டம், வெள்ளுவாடி கிராம மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிக்குச் சென்றுவர அரசுப் பேருந்துகள் இயக்க வேண்டும். மதிப்புக்கூட்டிய உணவுப்பொருள் தயாரிக்க வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி கடனுதவிகள் வழங்க வேண்டும். கால்நடைகளுக்கு கோமாரி நோய் மற்றும் அம்மை நோய் தடுப்பூசியை உரிய காலத்தில் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட பொருளாளா் பி. சின்னசாமி, விவசாயிகள் கூட்டமைப்பு நிா்வாகி ஆரோக்கியசாமி, மகளிரணி நிா்வாகி எஸ். காா்த்திகா, மாவட்டத் தலைவா் ஏ.கே. ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

SCROLL FOR NEXT