பெரம்பலூர்

விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவா் உயிரிழப்பு

30th Apr 2022 11:36 PM

ADVERTISEMENT

 

பெரம்பலூா் அருகே கடந்த 5-ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதன் மூலம் பலி எண்ணிக்கை 4 ஆக உயா்ந்தது.

சென்னையிலுள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த கலைஞா்கள், மதுரையில் கலை நிகழ்ச்சி நடத்துவதற்காக மினி லாரியில் இசைக் கருவிகளை ஏற்றுக் கொண்டு கடந்த 5-ஆம் தேதி அதிகாலை சென்று கொண்டிருந்தனா்.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூா் தண்ணீா்பந்தல் பகுதியில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த விழுப்புரம் அ.அன்பு (27) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

மேலும் விபத்தில் பலத்த காயமடைந்த அரியலூா் இ. அரவிந்த் (24), திருவண்ணாமலை மாவட்டம், செஞ்சி நா. நவீன் (25), கோவில்பட்டி லட்சுமிபுரம் செ.அருண்குமாா் (28) ஆகியோா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதில் அருண்குமாா் 6- ஆம் தேதியும், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அரவிந்த் 7-ஆம் தேதியும் உயிரிழந்தனா். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நவீன் சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்து பெரம்பலூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT