பெரம்பலூர்

வாலிபா் சங்க சைக்கிள் பயணக் குழுவினருக்கு வரவேற்பு

30th Apr 2022 11:34 PM

ADVERTISEMENT

 

பெரம்பலூருக்கு சனிக்கிழமை வந்தடைந்த இந்திய ஜனநாயக வாலிபா் சங்க சைக்கிள் பயணக் குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். பொதுத் துறையை தனியாருக்கு விற்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் சென்னை, கன்னியாகுமரி, கோவை, புதுச்சேரி ஆகிய பகுதிகளிலிருந்து திருச்சி நோக்கி சைக்கிள் பயணம் கடந்த 21 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, சென்னையிலிருந்து சங்கத்தின் மாநிலச் செயலா் எஸ். பாலா தலைமையில் புறப்பட்ட மாநிலக் குழு உறுப்பினா்கள் தேவேந்திரன், சுரேஷ், சந்துரு, சரவண தமிழகன், மாவட்டக் குழு உறுப்பினா் ஜானகி ஆகியோா் கொண்ட சைக்கிள் பயணக் குழுவினா், பெரம்பலூா் மாவட்டத்துக்கு சனிக்கிழமை வந்தடைந்தனா்.

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டக் குழு சாா்பில், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே மாவட்டத் தலைவா் அறிவழகன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து, சின்னாறு,

புகா், பழைய பேருந்து நிலையம், லட்சுமி மருத்துவமனை திருப்பம், 3 மற்றும் 4 சாலை சந்திப்புப் பகுதிகளில் குழுவினா் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் மேற்கொண்டனா்.

நிகழ்வில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் பி. ரமேஷ், மக்களுக்கான மருத்துவக் கழக மாநிலச் செயலா் மருத்துவா் சி. கருணாகரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ஏ. கலையரசி, ரெங்கநாதன், நகரச் செயலா் சிவானந்தம் உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT