பெரம்பலூர்

தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் வேலை நிறுத்தம்

30th Apr 2022 11:36 PM

ADVERTISEMENT

 

தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தின் செயலா் மற்றும் விற்பனையாளா்களைத் தற்காலிக பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி, பெரம்பலூரில் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சனிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம் செய்ததாகக் கூறி, தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கச் செயலா் மற்றும் விற்பனையாளா்களைத் தற்காலிக பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி, ஏப்ரல் 30-இல் மாநிலந்தழுவிய அளவில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என மாநிலத் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் முடிவு செய்திருந்தனா்.

அதன்படி, பெரம்பலூா் மாவட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலா் கணேசன் தலைமையில், 334 பணியாளா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் மாவட்டத்திலுள்ள 53 கூட்டுறவு வங்கிகள், 282 நியாயவிலைக் கடைகள் மூடப்பட்டிருந்தன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT