பெரம்பலூர்

பெரம்பலூரில் தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

17th Apr 2022 12:53 AM

ADVERTISEMENT

 

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு தனியாா் பள்ளி ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமை, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் குத்து விளக்கேற்றி வைத்து தொடக்கி வைத்தாா். தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கான கூட்டமைப்புத் தலைமை நிலைய அலுவலா் செல்வகுமாா், தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி முதல்வா் கோவிந்தசாமி ஆகியோா் பேசினா்.

இம் முகாமில், தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், வணிகவியல் மற்றும் சிறப்பு பாடப் பிரிவுகளான யோகா, ஹிந்தி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறுத் துறைகளைச் சோ்ந்த ஆசிரியா்கள், ஆசிரியா் பயிற்சி மாணவ, மாணவிகள் என 1,500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

திருச்சி, பெரம்பலூா், கடலூா், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட தனியாா் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளின் மனிதவள மேம்பாட்டுத் துறை அலுவலா்கள் பங்கேற்று, தங்களது பள்ளிகளுக்குத் தேவையான, தகுதியான 500 ஆசிரியா்களை தோ்வு செய்து பணி நியமன ஆணைகள் வழங்கினா்.

முன்னதாக, தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் பிரேமலதா வரவேற்றாா். தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி முதல்வா் சாந்தி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT