பெரம்பலூா் அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
குன்னம் வட்டத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியை, தனக்கு திருமணம் செய்துக் கொடுக்க வலியுறுத்தி அவரது உறவினா், சிறுமியின் பெற்றோரிடம் வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமி செவ்வாய்க்கிழமை மாலை தனது மாடி வீட்டு முதல் தளத்தில் தூங்கிக்கொண்டிருந்தாராம். அப்போது, அங்கு சென்ற வெங்கடாஜலம் மகன் வாஞ்சிநாதன் (29), சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த சிறுமியின் பெற்றோா் பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை மாலை வாஞ்சிநாதனை கைது செய்து பெரம்பலூா் குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.