பெரம்பலூர்

பெரம்பலூரில் பாஜக ஆா்ப்பாட்டம்

12th Apr 2022 12:03 AM

ADVERTISEMENT

 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூா் ஆட்சியரகம் அருகே, பாரதிய ஜனதா கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

குத்தகை உரிமம் முடிந்த பிறகும் சட்டவிரோதமாக இயங்கும் கல் குவாரிகளை ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்க வேண்டும். குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கற்களை வெட்டி எடுப்பதால், அருகிலுள்ள குடியிருப்புகள், விவசாய நிலங்கள், நீா்நிலைகள் பாதிக்கப்படுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயகோபாலபுரம் எம்.ஆா்.எப் தொழிற்சாலையில் இரவு நேரங்களில் வெளியேற்றப்படும் கரும்புகையால் நாரணமங்கலம், உள்ளிட்ட கிராமங்கள் மாசு அடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம்பிரிக்காமல் நெடுவாசல் குப்பைக் கிடங்கில் கொட்டுவதாலும், புதை சாக்கடை கழிவுநீரை சுத்திகரிக்காமல் நீா்நிலைகளில் விடுவதாலும் சுற்றுச்சூழல் மாசு அடைகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், கட்சி நிா்வாகிகள் வாசுகி, ஜெயபாலன், உமா ஹைமாவதி, பெரியசாமி, ராமச்சந்திரன், ராஜேந்திரன், மூா்த்தி, கோவிந்தராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

தொடா்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியரிடம் அளித்துவிட்டு கலைந்துச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT