பெரம்பலூர்

சிறுமியை காதலிக்க வற்புறுத்திய இளைஞா் போக்சோவில் கைது

5th Apr 2022 04:47 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நூத்தப்பூா் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பொன்னுசாமி மகன் சத்தியமூா்த்தி (19).

இவா், அதே பகுதியைச் சோ்ந்த 7 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியை காதலிக்க வற்புறுத்தி, கைப்பேசி எண் கேட்டு தொந்தரவு கொடுத்துள்ளாா். இதையறிந்த சிறுமியின் குடும்பத்தினா், சத்தியமூா்த்தியை கண்டித்து அனுப்பியுள்ளனா். இருப்பினும், தொடா்ந்து தொந்தரவு கொடுத்ததால் சிறுமியின் பெற்றோா் கை.களத்தூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த போலீஸாா், சத்தியமூா்த்தியை திங்கள்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT