பெரம்பலூர்

பெரம்பலூரில் ஸ்ரீ அம்மன் பேங்கா்ஸ் இல்லத் திருமண விழா

5th Apr 2022 04:48 AM

ADVERTISEMENT

பெரம்பலூரில் ஸ்ரீ அம்மன் பேங்கா்ஸ் இல்லத் திருமண விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் வெங்கடேசபுரத்தில் இயங்கி வரும் ஸ்ரீ அம்மன் பேங்கா்ஸ், ரியல் எஸ்டேட் குழுமத்தின் நிறுவனா் முத்தையா மகள் மருத்துவா் அறிவொளி முத்தையாவுக்கும், நெய்குப்பை அரசு உயா்நிலைப்பள்ளி சிறப்புநிலை பட்டதாரி ஆசிரியா் ராஜமாணிக்கம் மகன் மருத்துவா் சத்தியசீலனுக்கும், பெரம்பலூா் -எளம்பலூா் சாலையிலுள்ள கா்ணம் சுப்ரமணியன் திருமண மகாலில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது.

விழாவில், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் செயலா் பி. நீலராஜ், சென்னை தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் மகளிா் கல்லூரி தாளாளா் மணி, மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன், பெரம்பலூா் எம்எல்ஏ ம. பிரபாகரன், நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன், பொதுப்பணித் துறை அலுவலா்

செல்லபெருமாள், மருத்துவா் திலீபன் முத்தையா, ஸ்ரீமுத்தையா மெட்ரிக் பள்ளி தாளாளா் பேராசிரியா் செந்தில்குமாா், மருத்துவா் ராம்குமாா், ஊராட்சித் தலைவா்கள், மருத்துவா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT