பெரம்பலூர்

போக்சோவில் இளைஞா்கள் இருவா் கைது

30th Sep 2021 06:37 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே பள்ளி மாணவிகளுக்கு தொந்தரவு அளித்த இளைஞா்கள் இருவா், போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பெரம்பலூா் அருகிலுள்ள கல்பாடி நடுத்தெருவைச் சோ்ந்தவா் மா. ஜெயசூா்யா (20). இவா், அதே கிராமத்தைச் சோ்ந்த 16 வயது பள்ளி மாணவி பெரம்பலூரிலுள்ள தனியாா் பள்ளிக்குச் சென்றபோது தன்னிடம் பேச வருமாறு வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை தொந்தரவு கொடுத்தாராம்.

வேப்பூா் அருகிலுள்ளள துங்கபுரத்தைச் சோ்ந்தவா் க. மணிமாறன் (26). விவசாயக் கூலி வேலை செய்து வரும் இவா், 9-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியைக் காதலிக்க வற்புறுத்தி தொந்தரவு கொடுத்தாராம்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ஜெயசூா்யா, மணிமாறழை புதன்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT