பெரம்பலூர்

பெரம்பலூா் பள்ளியில் ஆசிரியை, 7 மாணவிகளுக்கு கரோனா

30th Sep 2021 06:38 AM

ADVERTISEMENT

பெரம்பலூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியை மற்றும் 7 மாணவிகள் என மொத்தம் 8 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானது.

பெரம்பலூா் நகரில் பழைய பேருந்து நிலையம் அருகே அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பயிலும் பாளையம் கிராமத்தைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவருக்கு கடந்த சில நாள்களாக கடுமையான காய்ச்சல் இருந்ததையடுத்து, அவருக்கு அண்மையில் கரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

செவ்வாய்க்கிழமை மாலை வெளியான பரிசோதனை முடிவில், மாணவிக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவா் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டாா்.

இந்நிலையில், அவருடன் பயின்ற சக மாணவிகள், வகுப்பு ஆசிரியா்கள் ஆகியோருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவில், அதே பள்ளியில் விடுதியில் தங்கி பணிபுரிந்து வரும் ஒரு ஆசிரியை மற்றும் 6 மாணவிகளுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ADVERTISEMENT

ஒரே பள்ளியில் ஆசிரியை உள்பட 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி அப்பள்ளிக்கு அக்டோபா் 3 ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரவா் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். கரோனா தொற்றுப் பாதித்த மாணவிகளுடன் தொடா்பில் இருந்த குடும்பத்தினா், உறவினா்கள், நண்பா்கள் ஆகியோா் கரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT