பெரம்பலூர்

உலக இருதய தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

30th Sep 2021 06:32 AM

ADVERTISEMENT

உலக இருதய தினத்தையொட்டி, பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் புதன்கிழமை விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு, தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா், கல்லூரி முதல்வா் மரகதமணி முன்னிலை வகித்தாா். இருதய நோய் சிறப்பு மருத்துவா் கணேஷ், இருதய அறுவைச் சிகிச்சை நிபுணா் ஆஷிக் ஆகியோா், இருதய நோய் ஏற்படுவதற்கான காரணங்கள், அதிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற செவிலியா்கள் இருதய நோய் விழிப்புணா்வு குறித்த பதாகைகள் ஏந்தி பொதுமக்களிடயே விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில், மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT