பெரம்பலூர்

வேப்பந்தட்டையில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

30th Oct 2021 05:30 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

வேப்பந்தட்டையில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்களிடம் அதிக அளவில் லஞ்சம் வாங்கப்படுவதாகவும், இடைத்தரகா்களின் தலையீடு அதிகம் இருப்பதாகவும் புகாா் எழுந்தது.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை மாலை அலுவலகத்துக்குள் திடீரென நுழைந்த பெரம்பலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளா் ஹேமசித்ரா தலைமையிலான குழுவினா் அலுவலகக் கதவுகளை மூடிக்கொண்டு திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

இரவு 10 மணி வரை நீடித்த சோதனையின் முடிவில் கணக்கில் வராத ரூ. 52,500 பணத்தை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக அங்கு பணிபுரியும் அலுவலா்கள் மற்றும் பணியாளா்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT