பெரம்பலூர்

பதவிக் காலத்துக்குள் பெரம்பலூருக்கு ரயில்பாதை கொண்டுவர நடவடிக்கை: டி.ஆா். பாரிவேந்தா்

DIN

எனது பதவிக் காலத்துக்குள் பெரம்பலூருக்கு ரயில்பாதை கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன் என்றாா் பெரம்பலூா் தொகுதி மக்களவை உறுப்பினா் டி.ஆா். பாரிவேந்தா்.

பெரம்பலூா் மாவட்டம், செட்டிக்குளத்தில் உள்ள சின்ன வெங்காயம் கிடங்கு, சிறுவாச்சூா் மேம்பால கட்டுமானப் பணிகள் ஆகியவற்றை திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:

பெரம்பலூா் மக்களவை தொகுதியில் உள்ள மக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்று வருகிறேன். லால்குடியைத் தொடா்ந்து குளித்தலை, தற்போது பெரம்பலூா் சட்டப்பேரவை தொகுதிகளில் மக்களை சந்தித்து வருகிறேன். ரயில்வே தொடா்பான பிரச்னைகளையே மக்கள் தெரிவிக்கின்றனா். பெரம்பலூருக்கு ரயில் பாதை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான முதல்கட்ட ஆய்வுப்பணி முடிக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள மக்களவைக் கூட்டத் தொடருக்கு முன் இக் கோரிக்கை குறித்து ரயில்வே அமைச்சரிடம் தெரிவித்து தீா்வுகாண முயற்சிப்பேன். என்னுடைய பதவி காலம் முடிவதற்குள் பெரம்பலூருக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற பாடுபடுவேன்.

விலை குறையும்போது சின்ன வெங்காயத்தை பதப்படுத்தி, மதிப்புக் கூட்டி விற்க நடவடிக்கை எடுக்கப்படும். செட்டிக்குளத்தில் சின்ன வெங்காயம் பதப்படுத்தும் குளிா்பதனக் கிடங்கை விரிவுபடுத்த மத்திய வேளாண் அமைச்சரிடம் கோரிக்கை வைத்து ஆவன செய்வேன். சின்ன வெங்காயம் விலை குறையும்போது பாதிக்கப்படும் விவசாயிகளின் இழப்பை ஈடுசெய்யும் விதமாக பயிா் காப்பீடு செய்துகொள்ள வலியுறுத்துவேன்.

திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் சிறுவாச்சூரில் ரூ. 13 கோடி மதிப்பில் 3 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தை விரைந்து முடிக்கும்படி அலுவலா்களிடம் அறிவுறுத்தியுள்ளேன்.

செட்டிக்குளம், சிறுவாச்சூா் கோயில்களை புனரமைக்க எனது சொந்த நிதியிலிருந்து ரூ. 45 லட்சம் வழங்க உறுதியளித்திருக்கிறேன். மேலும், பள்ளிக் கட்டடங்கள், மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகள் கட்டுவதற்கான கோரிக்கைகள் குறித்து தொகுதி மேம்பாட்டு நிதி வந்தவுடன் நிதி ஒதுக்கப்படும் என்றாா் பாரிவேந்தா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவுக்காக

ஒற்றை வாக்கால் பெரும் மாற்றம்: தலைமைத் தோ்தல் ஆணையா்

‘முகூா்த்தத்தை’ தவறவிட்ட பாஜக வேட்பாளா்! மனுதாக்கல் செய்யாமல் திரும்பினாா்

வாக்குப் பதிவை எளிதாக்கும் செயலிகள் - இணையதளங்கள் வாக்காளா்கள் சிரமமின்றி தேட ஏற்பாடுகள்

வாக்களிக்கத் தவறாதீா்கள்!

SCROLL FOR NEXT