பெரம்பலூர்

பெரம்பலூரில் விவசாயிகளின் அஸ்திக்கு அரசியல் கட்சியினா் அஞ்சலி

DIN

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய போது, கூட்டத்தில் காா் ஏற்றி கொலை செய்யப்பட்ட 5 விவசாயிகளின் அஸ்திக்கு பெரம்பலூரில் பல்வேறு அரசியல் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

உத்தரபிரதேச மாநிலம், லக்கிம்பூா்கெரியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக அமைதியாக போராடிக் கொண்டிருந்த போது, கூட்டத்தில் காா் ஏற்றியதில் 5 விவசாயிகள் கொல்லப்பட்டனா். இவா்களின்அஸ்தி பெரம்பலூருக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டுவரப்பட்டது.

நான்குச் சாலை சந்திப்புப் பகுதியில் அஸ்தி கொண்டுவரப்பட்ட வாகனத்துக்கு, மாவட்ட ஐக்கிய விவசாய முன்னணி அமைப்பு சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னா் அந்த வாகனம் ஊா்வலமாக புகா் பேருந்து நிலையம், பாலக்கரை, வெங்கடேசபுரம் வழியாகச் சென்று, பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள காந்தி சிலைக்கு வந்தடைந்தது. அங்கு விவசாயிகள், பொதுமக்கள் அஞ்சலிக்காக அஸ்தி கலசம் வைக்கப்பட்டது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் என். செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் வீ. ஞானசேகரன், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலச் செயலா் ப. காமராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாய அணி மாநிலச் செயலா் வீர.செங்கோலன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் கே. முகமது அலி, மதிமுக ஆலோசனைக்குழு உறுப்பினா் எஸ். துரைராஜ், திமுக பொதுக்குழு உறுப்பினா் கி. முகுந்தன் உள்ளிட்ட பலா் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தி, புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை தொடா்ந்து போராடுவோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயோள்..!

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT