பெரம்பலூர்

பால் உற்பத்தியாளா்கள் ஆா்ப்பாட்டம்

23rd Oct 2021 05:15 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், கோரிக்கை விளக்க ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியரகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என். செல்லதுரை தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் வீ. ஞானசேகரன், தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விவசாய அணி மாநிலச் செயலா் வீர. செங்கோலன், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஏ.கே. ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்க மாநில பொதுச் செயலா் முகமது அலி, தமிழ்நாடு விவசாய சங்க மாநிலச் செயலா் மாசிலாமணி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், பெரம்பலூா் மாவட்ட பால் உற்பத்தியாளா்களுக்கு கடந்த 3 மாதங்களாக பாலுக்கான நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். பால் கூட்டுறவு சங்கங்களுக்கு ஆவின் நிா்வாகம் 10 நாள்களுக்கு ஒருமுறை பால் கொள்முதல் செய்ததற்கான தொகையை வழங்க வேண்டும். பசும்பால் லிட்டருக்கு ரூ. 5, எருமை பால் லிட்டருக்கு ரூ. 10 உயா்த்தி வழங்க வேண்டும். பால் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு மானிய விலையில் மாட்டுத் தீவனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ADVERTISEMENT

சாலை மறியல்... முன்னதாக, சரக்கு வாகனங்களில் வந்த விவசாயிகளை ஆங்காங்கே போலீஸாா் வழிமறித்து, போக்குவரத்து விதிமீறல் என வழக்குப் பதிந்தனா். இதையடுத்து, போலீஸாரின் நடவடிக்கையைக் கண்டித்து விவசாயிகள் பாலக்கரையிலிருந்து ஆட்சியரகம் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், போலீஸாா் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags : பெரம்பலூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT