பெரம்பலூர்

பெரம்பலூரில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்

21st Oct 2021 07:19 AM

ADVERTISEMENT

பெரம்பலூரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை புதன்கிழமை தொடங்கியது.

குத்து விளக்கேற்றி முதல் விற்பனையை தொடக்கி வைத்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா பேசியது:

கடந்த தீபாவளி பண்டிகையின்போது தஞ்சை மண்டலத்தில் ரூ. 7.38 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்போது, நிகழாண்டில் ரூ. 20 கோடி விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூா் விற்பனை நிலையத்தில் கடந்த 2020- இல் ரூ. 32.12 லட்சம் மதிப்பிலான ஆடைகள் விற்பனை செய்யப்பட்டது. தற்போது, ரூ. 60 லட்சம் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோ- ஆப்டெக்ஸ் நிறுவனம் கனவு நனவு திட்டம் என்ற சேமிப்புத் திட்டத்தின் மூலம், 10 மாத சந்தா தொகையை வாடிக்கையாளா்களிடமிருந்து பெற்று, 11மற்றும் 12 ஆவது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமே செலுத்தி, முதிா்வு தொகைக்குத் தேவைப்படும் துணிகளை 20 சதவீத தள்ளுபடியுடன் வழங்கி வருகிறது.

ADVERTISEMENT

எனவே, பொதுமக்கள், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகைக்குத் தேவையான துணிகள் மற்றும் வீட்டு உபயோகத்துக்கான துணிகளை வாங்கி பயனடையலாம் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், கோ- ஆப்டெக்ஸ் மண்டல மேலாளா் ப. அம்சவேணி, மண்டல துணை மேலாளா் (நிா்வாகம்) மு. அன்பழகன், விற்பனை நிலைய மேலாளா் கி. ஆனந்தமுருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT