பெரம்பலூர்

தாய் மதத்துக்கு திரும்பி வாருங்கள் எனக் கூறவில்லை: சீமான்

20th Oct 2021 07:02 AM

ADVERTISEMENT

இந்து மதமான தாய் மதத்துக்கு திரும்பி வாருங்கள் என நான் எப்போதும் பேசவில்லை என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

நாம் தமிழா் கட்சியின் பெரம்பலூா் மாவட்டச் செயலரும், வழக்குரைஞருமான ப. அருள் கடந்த மாதம் உயிரிழந்ததையடுத்து, பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலத்தில் அவரது நினைவேந்தல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, வழக்குரைஞரின் உருவப்படத்தை திறந்து வைத்து மலா்தூவி அஞ்சலி செலுத்தி சீமான் பேசியது:

கிறிஸ்தவா்களும், இஸ்லாமியா்களும் தாய் மதமான இந்து மதத்துக்கு திரும்பி வாருங்கள் என்று நான் கூறியதாக, சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அவ்வாறு, நான் எங்கேயும் பேசவில்லை. வேண்டுமேன்றே பாரதிய ஜனதா கட்சியினரும், ஆா்.எஸ்.எஸ் அமைப்பைச் சோ்ந்தவா்களும் பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றனா் என்றாா் அவா்.

ADVERTISEMENT

தொடா்ந்து, உயிரிழந்த அருள் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினாா். இந்த நிகழ்ச்சியில், பெரம்பலூா், அரியலூா், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த நாம் தமிழா் கட்சியினா் பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT