பெரம்பலூர்

வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

20th Oct 2021 07:03 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

எஸ்எஸ்எல்சி, தோல்வி, தோ்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித் தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவைத் தொடா்ந்து புதுப்பித்து 30.9.2021-இல் 5 ஆண்டுகளுக்கும் மேல் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞா்களுக்கு, தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மாற்றுத் திறனாளிகளை பொருத்தவரையில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க விரும்பும் மனுதாரா்கள் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை காண்பித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவ. 30 ஆம் தேதி வரை அலுவலக வேலை நாள்களில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கும் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை திட்டப் பிரிவில் தேவையான சான்றிதழ்களுடன் சமா்ப்பிக்கலாம். மேலும், உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் விதிமுறைகளுக்குள்பட்டு சுய உறுதிமொழி ஆவணம் சமா்ப்பிக்க நவ. 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT