பெரம்பலூர்

வாலிகண்டபுரத்தில் உணவு தினம்

17th Oct 2021 12:23 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரத்திலுள்ள ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மையத்தில் உலக உணவு தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஊட்டச்சத்து குறைபாட்டை நிவா்த்தி செய்தல், குழந்தைகளுக்கான இணை உணவு மற்றும் சரிவிகித உணவு, இயற்கை சாா்ந்த உணவுகளை உட்கொள்வது, பால் மற்றும் முட்டையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகள், புரதச்சத்து நிறைந்த உணவு உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் ஆகியவை குறித்து தொழில்நுட்ப வல்லுநா்கள் வேளாண் அறிவியல் மைய மனையியல் ச. கோகிலவாணி, கால்நடை அறிவியல்பா. வினோத், ஆய்வகத் தொழில்நுட்பவியலாளா் ந. சதீஷ்குமாா் ஆகியோா் பேசினா்.

பாரம்பரிய நெல், சிறு தானியங்கள், இயற்கைச் சாா்ந்த உணவு வகைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. நிகழ்வில் 50-க்கும் மேற்பட்ட மகளிா் பங்கேற்றனா்.

நிறைவில், வேளாண் அறிவியல் மைய உழவியல் தொழில்நுட்ப வல்லுநா் மு. புனிதாவதி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT