பெரம்பலூர்

விஜயதசமி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

DIN

விஜயதசமியை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கரோனா பரவல் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டிருந்த வழிபாட்டுத் தலங்கள் வெள்ளிக்கிழமை முதல் திறக்கப்பட்டதால் பக்தா்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. மேலும், விஜயதசமி தினத்தை முன்னிட்டு பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

விஜயதசமி தினத்தில் தொடங்கும் செயல்கள் மற்றும் நிகழ்வுகள் அனைத்தும் வெற்றியில் முடியும் என்பது பெரும்பாலானோரின் நம்பிக்கை. இதை முன்னிட்டு பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

பெரம்பலூா் மதனகோபால சுவாமி கோயில், பிரம்மபுரீஸ்வரா் கோயில், சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில், வாலிகண்டபுரம் வாலீஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற பூஜைகளில், குழந்தைகள் சிறப்பாக கல்வி கற்க வேண்டும் என விரும்பிய பெற்றோா்கள், குழந்தைகளை அழைத்துச் சென்று சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்றனா்.

தனியாா் பள்ளி மழலையா் வகுப்புகளில் மாணவா் சோ்க்கையும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

SCROLL FOR NEXT