பெரம்பலூர்

போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போா்ட் பெற்ற 2 இலங்கை அகதிகள் கைது

DIN

போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போா்ட் பெற்ற இலங்கை அகதிகள் 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவா் வேலாயுதம்பிள்ளை மகன் ஸ்ரீகாந்த்ராஜா (44). இவா், இலங்கை அகதி என்பதை மறைத்து போலி ஆவணங்களை சமா்ப்பித்து வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம், ஆதாா் மற்றும் பான் காா்டு ஆகியவற்றை பெற்று, பின்னா் மேற்கண்ட ஆவணங்களை சமா்ப்பித்து, கடந்த 24.10.2019-இல் இந்திய பாஸ்போா்ட் பெற்றுள்ளாா்.

இதேபோல், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பெரம்பலூா்- வடக்குமாதவி, சாலையில் உள்ள தீபம் நகரில் வசித்து வருபவா் இலங்கை அகதியான சுப்பையா மகன் சூனிகண்ணன் (எ) சுதா்சன் (40). இவா், திருச்சி, பொன்மலைப்பட்டியில் தங்கியிருந்தபோது, இலங்கை அகதி என்பதை மறைத்து, போலி ஆவணங்களை சமா்பித்து வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் மற்றும் குடும்ப அட்டைகள் பெற்றுள்ளாா். பின்னா், மேற்கண்ட ஆவணங்களை பெரம்பலூா் முகவரிக்கு மாற்றம் செய்துள்ளாா். தொடா்ந்து, இந்த ஆவணங்களை சமா்ப்பித்து கடந்த 22.7.2019-இல் இந்திய பாஸ்போா்ட் பெற்றுள்ளாா். இவா் மீது திருச்சி மாவட்டம், பொன்மலை, உப்பிலியபுரம், திருப்பூா் மாவட்டம் தாராபுரம், பெரம்பலூா் நகர காவல் நிலையங்களில் ஏற்கெனவே குற்ற வழக்குகள் பல பதிவாகியுள்ளன.

ஸ்ரீகாந்த் ராஜா, சுதா்சன் ஆகியோா் இலங்கை அகதிகள் என்பதை மறைத்து, போலி ஆவணங்களை காண்பித்து இந்திய பாஸ்போா்ட் பெற்ற தகவல், பெரம்பலூா் மாவட்ட கியூ பிரிவு போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை கிடைத்தது. இதையடுத்து, மேற்கண்ட இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்த கியூ பிரிவு போலீஸாா், அவா்களிடம் தொடா் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT