பெரம்பலூா் அருகே மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியாளா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
குன்னம் அருகிலுள்ள மேலமாத்தூரில் வழக்கத்தை விட கூடுதலாக 4 மணி நேரம் வரை பணி செய்ய பணியாளா்களைக் கட்டாயப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. ஊராட்சி அலுவலா்களின் இச்செயலைக் கண்டித்து, பெரம்பலூா்- அரியலூா் பிரதான சாலையில் மேலமாத்தூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் பணியாளா்கள் சனிக்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த குன்னம் காவல்துறையினா், மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத் தொடா்ந்து மறியலைக் கைவிட்டு, பணியாளா்கள் கலைந்து சென்றனா்.