பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் 2.97 லட்சம் நபா்களுக்கு தடுப்பூசி

9th Oct 2021 11:36 PM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தில், இதுவரையில் 2.97 லட்சம் நபா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா.

பெரம்பலூா் ஆட்சியரகக் கூட்டரங்கில், வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் மேலும் அவா் கூறியது:

மாவட்டத்தில் 5- ஆம் கட்டமாக கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (அக். 10) 29 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 4 அரசு மருத்துவமனைகள் மற்றும் 207 இடங்களில் நடைபெற உள்ளது. முகாமில் 30 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் செப்டம்பா் 12, 19,26, அக்டோபா் 3 என 4 கட்டங்களாக நடைபெற்ற தடுப்பூசி முகாம்கள் மூலம் இதுவரை 80,983 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது (செப்டம்பா் 12-இல் 24,082, செப்டம்பா் 19-இல் 12,727, செப்டம்பா் 26-இல் 22,230, அக்டோபா் 3-இல் 21,054 போ்).

ADVERTISEMENT

இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 4,51,200 போ்களில் முதல் தவணை தடுப்பூசி 2,97,170 பேருக்கும், 2- ஆம் தவணை தடுப்பூசி 89,784 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இதில், 6,358 மாற்றுத் திறனாளிகளில் 5,191 பேருக்கும், 6,857 கா்ப்பிணிகளில் 6,281 பேருக்கும், 5,219 பாலூட்டும் தாய்மாா்களில் 4,786 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

எனவே, 18 வயதுக்கு மேற்பட்டவா்களில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி, 84 நாள்கள் கடந்தவா்கள் முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT