பெரம்பலூர்

அரசுத் துறைகளில் காலிபணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

3rd Oct 2021 11:59 PM

ADVERTISEMENT

அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என அரசு ஊழியா் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

துறைமங்கலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில், அரசு ஊழியா் சங்கத்தின் 13 ஆவது மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் இளங்கோவன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் குமரி ஆனந்தன் வேலை அறிக்கையும், மாவட்ட பொருளாளா் ராஜராஜன் நிதிநிலை அறிக்கையும் வாசித்தனா்.

மாநில பொருளாளா் பாஸ்கரன் மாநாட்டை தொடக்கி வைத்தாா். மாநிலத் துணைத் தலைவா் பெரியசாமி, டிச. 18, 19-இல் சென்னையில் நடைபெறவுள்ள மாநில மாநாடு குறித்து பேசினாா்.

நீண்ட காலமாக கிடப்பிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்க வேண்டும். பெரம்பலூா் வழியாக ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நிா்வாக பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்.

ADVERTISEMENT

அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும். 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். நகராட்சி 2 ஆம் நிலையில் உள்ளதால், அதற்கான வீட்டு வாடகைப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாவட்டத் துணைத் தலைவா்கள் இ. மரியதாஸ், சிவக்குமாா், கொளஞ்சி வாசு, மாவட்ட மகளிா் பொறுப்பாளா் தேன்மொழி உள்பட பலா் பங்கேற்றனா்.

மாவட்ட துணைத் தலைவா் சரவணசாமி வரவேற்றாா். மாநில செயற்குழு உறுப்பினா் சுப்ரமணியன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT