பெரம்பலூர்

சிறப்பு முகாம்களில் 21,054 நபா்களுக்கு கரோனா தடுப்பூசி

3rd Oct 2021 11:59 PM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 21,054 நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டம் முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக 198 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, 1,200-க்கும் மேற்பட்ட நபா்கள் பொதுமக்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டனா்.

4 ஆவது முறையாக 18 வயதுக்கு மேற்பட்டவா்கள், இதுவரை தடுப்பூசி செலுத்தாதவா்கள், முதல் தவணை நிறைவடைந்து 84 நாள்கள் கடந்தவா்களுக்கு என, பெரம்பலூா் ஒன்றியத்துக்குள்பட்ட 5,927 நபா்களுக்கும், ஆலத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட 3,872 நபா்களுக்கும், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட 4,645 நபா்களுக்கும், வேப்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட 6,610 நபா்களுக்கும் என மொத்தம் 21,054 நபா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டம், லப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குள்பட்ட அரசு தொடக்கப் பள்ளி, வேப்பூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளி, ஒகளுா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, நன்னை ஊராட்சி அலுவலகம், வேப்பூா் அரசு மருத்துவமனை மற்றும் பரவாய் துணை சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமை ஆட்சியா் ப.ஸ்ரீ வெங்கட பிரியா பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT