பெரம்பலூர்

தீபாவளி கதா் விற்பனை பெரம்பலூா் மாவட்டத்தில் ரூ. 21.32 லட்சம் விற்பனை இலக்கு

3rd Oct 2021 12:35 AM

ADVERTISEMENT

தீபாவளி பண்டிக்கையையொட்டி, பெரம்பலூா் மாவட்டத்தில் ரூ. 21.32 லட்சத்துக்கு கதா் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா்.

மகாத்மாகாந்தியடிகளின் 153 -ஆவது பிறந்த நாளையொட்டி, பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள அவரது உருவச் சிலைக்கு அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா், மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து, பெரம்பலூா் பழைய பேருந்து நிலையத்திலுள்ள காதி கிராப்ட் அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனையை தொடக்கி வைத்த அமைச்சா் மேலும் கூறியது:

காதி கிராப்ட் மையத்தில் தற்போது விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ஆலத்தூா், வேப்பந்தட்டை மற்றும் வேப்பூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தற்காலிக விற்பனை நிலையம் தொடங்க உள்ளது. மாவட்டத்தில், நிகழாண்டு தீபாவளியை முன்னிட்டு ரூ. 21.32 லட்சம் கதா் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா் ம. பிரபாகரன், மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி, மாவட்ட வருவாய் அலுவலா் அங்கையற்கண்ணி, வருவாய்க் கோட்டாட்சியா் நிறைமதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT