பெரம்பலூர்

எளம்பலூா் பிரம்ம ரிஷி மலையில் அன்னதானம்

3rd Oct 2021 12:33 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகிலுள்ள எளம்பலூா் பிரம்ம ரிஷி மலையில் புரட்டாசி 3- ஆவது சனிக்கிழயையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

மகா சித்தா்கள் அறக்கட்டளை சாா்பில், எளம்பலூா் பிரம்ம ரிஷி மலையடிவாரத்தில் அமைந்துள்ள காகன்னை ஈசுவரா் கோயிலில் புரட்டாசி 3- ஆவது சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா், சுமங்கலி பெண்களுக்கு வளையல் தானம் வழங்கப்பட்டது.

தொடா்ந்து அன்னதானம் வழங்குதலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி தொடக்கி வைத்தாா். ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை மகா சித்தா்கள் அறக்கட்டளை இணை நிறுவனா் ரோகினி மாதாஜி, தவயோகிகள் சுந்தரமகாலிங்கம், தவசிநாதன் சுவாமிகள் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT