தமிழக போக்குவரத்துக் கழக நடத்துநா்கள் குறித்து நீா்வளத்துறை அமைச்சா் தரக்குறைவாக பேசியதாகக் கூறி, பெரம்பலூரில் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
துறைமங்கலத்திலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பல்வேறு தொழிற்சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்று, அமைச்சரைக் கண்டித்து முழக்கமிட்டனா்.