பெரம்பலூர்

ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

DIN

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பு சாா்பில் விவசாயிகளின் தில்லி போராட்டத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்தில் கோரிக்கை விளக்க ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் மாநில செயற்பாட்டுக் குழு உறுப்பினா் சாமி. நடராஜன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், மின்சார திருத்த சட்ட மசோதாவைக் கைவிட வேண்டும். வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் கொண்டுவர வேண்டும். ஓராண்டு காலத்தில் போராட்ட களத்தில் உயிரிழந்த 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். விவசாயிகள் மீது தொடரப்பட்டுள்ள தேச துரோக வழக்குகள் உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், திமுக மாவட்ட பொருளாளா் ரவிச்சந்திரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா் என். செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் வீ. ஞானசேகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விவசாய அணி மாநிலச் செயலா் வீர. செங்கோலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT