பெரம்பலூர்

சிறப்பாக பணியாற்றிய தீயணைப்புத் துறையினருக்கு பரிசளிப்பு

30th Nov 2021 01:38 AM

ADVERTISEMENT

பெரம்பலூா்: வடகிழக்கு பருவ மழையின்போது சிறப்பாக பணியாற்றிய தீயணைப்புத் துறை அலுவலா்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து தீயணைப்புத்துறை அலுவலா்களை பாராட்டி பரிசுகள் வழங்கிய ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா பேசியது:

மாவட்டத்தில் தொடா் மழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களுக்கு இடா்பாடுகள் ஏற்பட்டது. அப்போது, தீயணைப்பு, காவல்துறை, வருவாய் துறையினா் களப்பணியாற்றி பொதுமக்களுக்கு சிரமமின்றி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். குறிப்பாக, தீயணைப்புப் படையினா் பொதுமக்களை மீட்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டனா். தீயணைப்புப் படையினரை கௌரவிக்கும் வகையில், குடியரசு தினத்தன்று சான்றிதழ் வழங்கப்படும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலா் அம்பிகா, உதவி மாவட்ட அலுவலா் ஹக்கீம் பாட்ஷா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT