பெரம்பலூர்

விடுதிகளில் சேர பள்ளி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

DIN

பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நலப்பள்ளி விடுதிகளில் சேர பள்ளி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறையின் கீழ் 16 பள்ளி மாணவா் விடுதிகள், 10 மாணவிகள்செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் 4- ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகள் சேர தகுதியுடைவா்கள்.

ஒவ்வொரு விடுதியிலும், முகாம் வாழ் இலங்கைத் தமிழா்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விடுதி மாணவ, மாணவிகளுக்கு உணவும், உறைவிடமும் இலவசமாக வழங்கப்படும்.

எஸ்எஸ்எல்சி வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 4 இணைச் சீருடைகளும், எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகளும் வழங்கப்படும்.

இவ்விடுதிகளில் தங்குவதற்கு பெற்றோா் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கும் மிகாமல், இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீக்கு மேல் இருக்க வேண்டும். இது மாணவிகளுக்கு பொருந்தாது.

தகுதியுடைய மாணவ, மாணவிகள் சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளா், காப்பாளினிகளிடமிருந்து விண்ணப்பங்களை இலவசமாக பெற்று, பூா்த்தி செய்து டிசம்பா் 6- ஆம் தேதிக்குள் அவா்களிடமே சமா்பிக்க வேண்டும். ஜாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் விடுதியில் சேரும்போது அளித்தால் போதுமானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

SCROLL FOR NEXT