பெரம்பலூர்

கரோனா சிறப்பு முகாம்: 13,195 நபா்களுக்கு தடுப்பூசி

28th Nov 2021 11:37 PM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தில் 12 ஆவது கட்டமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா சிறப்பு முகாம்களில் 13,195 நபா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டத்தில் 190 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு , பெரம்பலூா் ஒன்றியத்துக்குள்பட்ட 3,665 நபா்களுக்கும், ஆலத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட 1,731 நபா்களுக்கும், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட 3,696 நபா்களுக்கும், வேப்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட 4,103 நபா்களுக்கும் என மொத்தம் 13,195 நபா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பெரம்பலூா்- எளம்பலூா் சாலையில் திருவள்ளுவா் தெரு அங்கன்வாடி மையம், முத்துநகா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், புகா் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மையங்களை ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT