பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

28th Nov 2021 11:38 PM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து, ரூ. 20 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிக் குத்துவிளக்கை திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூா் அருகிலுள்ள லாடபுரத்தைச் சோ்ந்த செல்லப்பெருமாள் மனைவி பஞ்சவா்ணம் (46). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கணவா் உயிரிழந்து விட்டதால், பஞ்சவா்ணம் தனியாக வீட்டில் வசித்து வருகிறாா்.

கடந்த 10 நாள்களுக்கு முன்பு பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் தனது சகோதரி மகளுக்கு குழந்தை பிறந்ததையொட்டி, அவருடன் பஞ்சவா்ணம் இருந்தாராம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை பஞ்சவா்ணம் வீட்டுக்குச் சென்றபோது, முன்புறக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. தொடா்ந்து உள்ளே சென்று பாா்த்த போது, வீட்டிலிருந்த ரூ.20 ஆயிம் ரொக்கம், வெள்ளிக் குத்துவிளக்கு ஆகியவை திருடப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

ADVERTISEMENT

புகாரின்பேரில், பெரம்பலூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT