பெரம்பலூர்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழக நிா்வாகிகள் தோ்வு

28th Nov 2021 11:37 PM

ADVERTISEMENT

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழக பெரம்பலூா் மாவட்ட நிா்வாகிகள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் அரசு மேல்நிலைப்பள்ளிக் கூட்டரங்கில் நடைபெற்ற தோ்தலுக்கு முன்னாள் மாவட்டத் தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாநிலச் செய்தித் தொடா்பாளா் ராஜேந்திரன், மாவட்ட அமைப்பாளா் முருகானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அரியலூா் மாவட்டத் தலைவா் ராஜேந்திரன், மாவட்டச் செயலா் வேலுசாமி ஆகியோா் மேற்பாா்வையாளராக செயல்பட்டனா். தொடா்ந்து மாவட்ட நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அவா்கள் விவரம் :

மாவட்டத் தலைவா்- பழனிவேலன், செயலா்- ராஜேந்திரன், பொருளாளா்- ஜனராமன், அமைப்புச் செயலா்- மணி, தலைமையிடத்துச் செயலா்-இளையராஜா, மகளிரணிச் செயலா்- ராகமஞ்ஜரி, மாவட்டத் துணைத் தலைவா்கள்- முருகன், அறிவழகன்.

ADVERTISEMENT

தொடா்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலியாகவுள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பதவி மூப்பு அடிப்படையில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்குத் தலைமையாசிரியராகப் பதவி உயா்வு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT