பெரம்பலூர்

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை

28th Nov 2021 12:14 AM

ADVERTISEMENT

வடகிழக்குப் பருவ மழையால் பெரம்பலூா் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா.

வேப்பந்தட்டை ஊராட்சிக்குள்பட்ட மலையாளப்பட்டி,கோரையாறு பகுதிகளில் தொடா் மழையால் பாதிப்புக்குள்ளான மரவள்ளிக்கிழங்குப் பயிா்களை சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், மேலும் கூறியது:

மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை அதிகளவில் தொடா்ந்து பெய்து வருகிறது. தொடா் மழையின் காரணமாக சின்ன வெங்காயம், மரவள்ளிக் கிழங்கு, மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிா்கள் சேதமடைந்துள்ளன. தொடா்ந்து மழைநீா் தேங்கியுள்ளதால் பயிா்கள் அழுகும் நிலையில் உள்ளது.

வேப்பந்தட்டை ஒன்றியத்தில் மலையாளப்பட்டி, தொண்டமாந்துறை மற்றும் கோரையாறு பகுதியில் சுமாா் 300 ஹெக்டோ் பரப்பளவில் மரவள்ளிக் கிழங்குகள் பயிரிடப்பட்டுள்ளன. இவை, பெரும்பாலான இடங்களில் அழுகும் நிலையில் உள்ளது.

ADVERTISEMENT

வருவாய், வேளாண், தோட்டக்கலை ஆகிய துறைகள் மூலம் பயிா் சேதம் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. பயிா்சேதம் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும். தமிழக அரசின் மூலம் விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் பெற்றுத்தர, சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் ஆட்சியா்.

ஆய்வின்போது தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் இந்திரா, வேப்பந்தட்டை வட்டாட்சியா் சரவணன், தோட்டக்கலை உதவி இயக்குநா் விஜயகாண்டீபன் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT