பெரம்பலூர்

விருது பெற இளையோா் மன்றங்களுக்கு நேரு யுவகேந்திரா அழைப்பு

21st Nov 2021 11:55 PM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்ட நேரு யுவகேந்திரா சாா்பில், மாவட்ட அளவிலான விருது பெற இளையோா் மன்றங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட இளைஞா் அலுவலா் சுருதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மூலம், சிறப்பாக சமூக சேவையாற்றும் இளையோா் மன்றங்களுக்கு மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் ஆண்டுதோறும் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. அதன்படி, பெரம்பலூா் மாவட்டத்தில் நேரு யுவகேந்திராவுடன் இணைந்து செயல்பட்டு வரும் சிறந்த இளையோா் மன்றங்களுக்கு விருது வழங்கப்படுகிறது.

இம் மாவட்டத்தில் இளையோா் மன்றங்களின் மூலமாக குடும்ப நலன் மற்றும் நலக்கல்வி, சுற்றுச்சூழல் விழிப்புணா்வு, தொழில்கல்வி, பெண்கள் மேம்பாடு, கிராமங்களில் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்துதல், இளையோா்களுக்கு திறன்வளா்ச்சிப் பயிற்சிகள் அளித்தல், சமூக விழிப்புணா்வு ஏற்படுத்துதல், சுகாதார விழிப்புணா்வு பணிகளை செய்து வரும் இளைஞா், மகளிா் மன்றங்கள் விருது பெற தகுதியுடையவை.

ADVERTISEMENT

மாவட்ட சங்கங்களின் பதிவாளா் அலுவலகத்தில் மன்றங்கள் விண்ணப்பிக்கலாம். கடந்த 1.4.2020 முதல் கடந்த மாா்ச் 31 ஆம் தேதிக்குள் சேவை செய்ததற்கான புகைப்பட ஆதாரங்கள், பாராட்டுச் சான்றிதழ்கள், அழைப்பிதழ்கள், பத்திரிகை செய்திகள் மற்றும் பயனாளிகள் பெயா் பட்டியல் ஏற்றுக் கொள்ளப்படும்.

தகுதி, விருப்பமுள்ள மன்றங்கள் பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்புப் பகுதியிலுள்ள அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, பூா்த்தி செய்து நவ. 30 ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04328 -296213, 7736811030, 9443707581 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT